துளி செய்தி

பல்வேறு தேசிய இன தலைவர்களின் சந்திப்பில் - நாம் தமிழர் கட்சி

 மனித உரிமைக்கான நாகாலாந்து மக்கள் இயக்க தலைவர்கள் திரு. நீங்கலோ குரோம், நாகாலாந்தின் டிமாப்பூர் நகரில் நடத்திய பல்வேறு தேசிய இன தலைவர்களின் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டனர்


 தமிழர் நல பேரியக்க தலைவர் மு களஞ்சியம் , மருது மக்கள் இயக்க தலைவர் முத்து பாண்டி , உலக சீக்கிய செய்திகள் தலைமை ஆசிரியர் பேராசியர் ஜக்மோகன் சிங் , தல் கல்சா கட்சி செய்தி தொடர்பாளர் பரம்ஜித் சிங் , சிக் சியாசத் பத்திரிகை தலைமை ஆசிரியர் பரம்ஜித் சிங் , கிசான் மஸ்ட்வார் சேத்தனா மத்தியபிரதேசம் தலைவர் சங்கர் சங்கர் டட்வால் , ஆதிவாசி பக்லேயோ தலைவர் மத்திய பிரதேசம் தலைவர் பீம்சிங் லசானியே, ஜன்புரட் மத்தியபிரதேசம் தலைவர் சமதன் பட்டேல்,

SFR தலைவர் மிருத்யூ ஜே, RJD பீகார் பொது செயலாளர் ஸ்யாம் நந்தன் , ஜமாஜ்வாடி சத்ரசபா மாணவர் தலைவர் முனைவர். முலாயம் சிங் யாதவ் , சந்தீப் பாண்டே சோசியலிஸ்ட் கட்சி , ராஜீவ் யாதவ் பீகார் மஞ்ச், பங்கஞ் புஷ்கர் Complexity Union , கவாங் ஹக்கார் தலைவர், அருணாச்சல் நாகா மாணவர் ஒன்றியம், திரு வாங்லாங் , ANSA , கீப்வாங் , தலைவர் , ஒட்டிங் மாணவர் ஒன்றியம் நாகாலாந்து உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு 3.8.1015 ்அன்று கையெழுத்தான  நாகாலாந்து இந்திய  ஒப்பந்தத்தை இந்திய அரசு மதித்து நடக்க வலியுறுத்தினார்கள்



 இம்மாநாட்டில்  இந்திய அரசு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு ஒடுக்குமுறைகள் பற்றியும் , 1956 முதல் இப்போது வரை நடந்து வரும் தமிழ் இனப்படுகொலையை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர் தமிழர்களுக்காக , இனப்படுகொலை நீதிக்காக , தமிழர்களின் உரிமைக்காக கடைசி வரை ஆதரவளிப்பதாக உறுதி கொடுத்துஉள்ளனர்