பொதுக்கூட்டத்தில் எதார்த்தமாக இருந்தோம் மேடையில் ஏறி விட்டீர்கள், இப்போது தயாரிப்போடு வந்திருக்கிறோம் வா மோதி பார்ப்போம் திமுகவினருக்கு அறைகூவல் விடுத்த சீமானின் தம்பி
தர்மபுரி மாவட்டம், அரூரில் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிராம கலைநிகழ்ச்சியோடு மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து கார்த்திகா அவர்கள் பேசினார் நாம் தமிழர் கட்சி தேவை என்பதையும் மற்ற கட்சி விட நாம் தமிழர் போராட்டம்,களத்தை விளக்கி சொன்னார்,
இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கரிகாலன், சேலம். சென்னை எட்டு வழி சாலையை விரைவாக சாலையாக பெயர் மாற்றம் செய்து திட்டத்தை தற்போது திமுக அரசு நடைமுறைப்படுத்த காத்திருக்கிறது என்றும், இந்தத் திட்டத்தை அரூர் பகுதிவாழ் மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது தடுத்து நிறுத்த வேண்டும். எப்போதும் உங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் துணை நிற்பார்கள் என்று பேசினார்.மேலும் மொரப்பூரில் நடந்தபொது கூட்டத்தில் நாங்கள் எதார்த்தமாக
அதை தொடர்ந்து திலீபன் அவர்கள் திராவிட மாடல் நடக்கும் அவலங்கள் மற்றும் ஊழல் பட்டியல்,திமுக செய்த தீமைகளை விளக்கி பேசினார்.
இந்த கூட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திலீப், தலைமையில் நடைபெற்றது. மற்றும் சட்டமன்ற தொகுதி தலைவர் இளையராஜா, சுரேஷ், வெள்ளிங் கிரி, ஸ்டாலின், வின்சென்ட், அருண் குமார். மகேஷ், மற்றும் தலைமை பேச்சாளர் பேராவூரணி திலிபன், கரிகாலன், கார்த்திகா, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வு அந்த பகுதியில் பேசு பொருளாக அமைந்துஉள்ளது