நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு புதுக்கோட்டை மாவட்டம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட வடகாடு ஒன்றியத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஹுமாயூன் கபீர் மற்றும் நாடாளுமன்ற பொறுப்பாளர் திரு. கரு.சாயல்ராம் இருவரின் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது, இந்த நிகழ்வில் ஆறு தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள் திரு. சிவ. துரை பாண்டியன், திரு கா.காவூதீன், திரு. இரா. கணேசன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களான திரு ரா.ராஜாராம், திரு சா.முகமது இபுராகிம், திரு மு. ரவிச்சந்திரன், திரு. கரு. பிச்சரத்தினம், திரு. வி.பொன்வாசி நாதன், திரு. மா. ஜெயந்தன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை பரிமாறி கொண்டதோடு கீழ்வரும் தீர்மானங்களையும் நிறைவேற்றி நடைமுறைபடுத்த அறிவுறுத்தப்பட்டது
அவை வருமாறு:
பகுதி சார்ந்த உறுப்பினர் முகாம்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
அவ்வப்போது கட்சியின் உறுப்பினர்களின் இல்லங்களுக்கே சென்று அவர்களை சந்தித்து அவர்களுடனான தொடர்பினை உயிர்ப்போடு வைத்திருத்தல்
அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளை முறையே சந்தித்து கட்சியின் கொள்கை கோட்பாடுகளை விளக்குதல்
வரும் காலங்களில் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் குறைந்தது பத்து நபர்களை நியமிக்க ஆயத்தமாதல்
ஒன்றிய மற்றும் சிற்றூர்களில் உள்ள வாக்கு சாவடி எண்ணிக்கைகளை கருத்தில் கொண்டு கிளை கட்டமைப்பை வலுவாக்கி கொடியேற்றம் செய்து பராமரித்தல்
பொறுப்பாளர்கள் நியமனம் ஒன்றிய நகர மற்றும் பாசறை பொறுப்புகளை சரியான நபர்களை கொண்டு கட்டமைப்பு செய்து இலக்குகளை நிர்ணயித்தல்
பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் வகையில் அந்தந்த பகுதிகளில் சூழல் மற்றும் நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப ஏதாவது சிறு/ குறு வணிகங்களை துவங்கி அதில் நம்மவர்களை அமர்த்தி வருவாயை ஈட்டியும் கட்சியின் செயல்பாடுகளையும் ஒருசேர முன்னெடுப்பதோடு நிதி சேகரிப்பையும் கொண்டு கட்சியின் உட்கட்டமைப்பினை வலுவாக்குதல்
பகிரி குழுவினை முறையாக கட்டமைத்து அதில் கட்சியின் செயல்பாடுகளை மட்டும் பகிர்ந்து கொள்ள குறிப்பிட்ட சில பொறுப்பாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி ஏனைய பிற பின்தொடர்பவர்களை வெறும் வாசிப்பாளர்களாக மட்டும் அந்த பகிரி குழுக்களில் பயணிக்கச் செய்து கட்சியின் ஒழுக்க நெறிகளை சரியாக பின்பற்றுதல்
மகளீரை மையப்படுத்தி செயல்திட்டங்களை உருவாக்குதல்
பொது சமூகத்தில் அடையாளமாக இருப்பவர்களை கட்சிக்குள் கொண்டு வருதல்
வாரம் ஒருமுறை ஒன்றிய கலந்தாய்வு மாதம் ஒரு முறை தொகுதி கலந்தாய்வு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒருங்கிணைந்த மாவட்ட கலந்தாய்வு என கட்சியின் வளர்ச்சி குறித்த ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முடுக்கி விடுதல்.
கட்சி உறுப்பினர்கள் தம் குடும்பங்களில் நிகழும் அனைத்து சுக/ துக்கங்களிலும் தவறாமல் பெருந்திரளாக கலந்து கொண்டு அவர்களுக்கு உரிய மரியாதையை உறுதி செய்து பொதுப்பார்வையிலும் நன்மதிப்பை தக்க வைத்து கொள்ளுதல்
ஒவ்வொரு தொகுதியிலும் முக மதிப்பீடு என்கிற அடிப்படையில் அதற்கு தகுதியும் அனுபவும் திறமையும் கொண்ட தளபதிகளை உருவாக்கி அவர்களின் செயல்பாடுகளை வெளிக்காட்டி வைத்தல்
உள் முரண்பாடுகளை அறவே தவிர்க்க்கும் வகையில் கட்சியின் உயரிய கொள்கைகளான சகிப்பு தன்மை விட்டுக்கொடுத்தல் அரவணைத்து செல்லுதல் தன்னை முன்னிலை படுத்தாது தன்னை சுற்றி நம்பிக்கையோடு களமாடி வரும் அனைவரையும் அவ்வப்போது வெளிக்காட்டி உற்சாகமூட்டி ஒரு இணக்கமான போக்கினை நிலை நிறுத்திக் கொள்ளுதல்
பதினான்கு முக்கிய தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு அவற்றை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக நடைமுறைப்படுத்தி, அவற்றின் செயல்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வழி நடத்துவார்கள் என நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களாலும் புரிந்து கொண்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது