துளி செய்தி

பெண் எனும் பேராற்றல் எனும் தலைப்பில் கருத்தரங்கம் சீமான் அழைப்பு

 உலகெங்கிலும் வாழும்  தாய்த்தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்

" பெண் விடுதலை இல்லையேல் மண்விடுதலை இல்லை" எனக் கூறி பெண்களின் பெருந்தேவையை இவ்வுலகிற்கு  பேரறிவிப்பு செய்தார் நம் தமிழ்தேசிய தலைவர் அவர்கள். அவர் வழியினையே பின்பற்றி அரசியலில் மகளிருக்கு சமபங்கு அளித்து அதிகாரப் பகிர்வளித்தது நாம் தமிழர் கட்சி. நமது மகளிரும் அறிவாற்றலில் எவருக்கும் சளைத்தவர் இல்லை என்று களத்தில் தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றனர். அதனை மேலும் உறுதி படுத்தும் விதத்தில் வருகின்ற 20.03.2022 அன்று அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில், சென்னையில், நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை முன்னெடுக்கும் 'பெண் எனும் பேராற்றல்' எனும் தலைப்பில், பெண் ஆளுமைகளுடன், முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 

இந்நிகழ்வினைச் சிறப்புற நடத்தி வெற்றி காண பெரும் தடையாக இருப்பது பெருளாதாரம் மட்டுமே.  ஆகவே, உறவுகள் அதை உடைத்தெறிந்து ஒன்று கூடி நிதி உதவி செய்து இக்கருத்தரங்கை மாபெரும் வெற்றி அடைய செய்திட, உதவி கரம் நீட்டி எங்களுக்கு வலு சேர்த்திட வேண்டும்  என்று பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

வரலாற்றுச் சிறப்பு மிக்க இம்மாபெரும் நிகழ்விற்கு உங்களின் நிதி பங்களிப்பை செலுத்த வேண்டிய இணைப்பு (இணைப்பில் நிகழ்வு தேதி தவறாக உள்ளது, விரைவில் 20.03.22 என்று மாற்றப்படும்)

 நிகழ்விற்கு நன்கொடை வழங்க:

  https://donate.naamtamilar.org/womens-day.html