துளி செய்தி

விழித்தெழு_தமிழா - அரசியல் கருத்தரங்கம்

ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 07 மணி வரை முழுநாள் நிகழ்வாக சென்னை, மதனந்தபுரம், முகலிவாக்கம் முதன்மைசாலையில் அமைந்துள்ள,

சிறி. எஸ்.ஏ.கே.ஜெய் மாருதி மகாலில் " விழித்தெழு " என்ற தலைப்பில் அரசியல் கருத்தரங்கம் தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ.வியனரசு தலைமையில் சிறப்புற நிகழ்தேறியது.

காலை தொடங்கிய முதல் அமர்வில் தலைவர் அ.வியனரசு தலைமை உரைக்குப் பின்னர் தமிழ்த் தேசிய கிருத்துவர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மை.பா.சேசுராஜ் அவர்களும், தமிழ்ச் சமூகச் செயற்பாட்டாளர் நாச்சியாள் சுகந்தி அவர்களும், தமிழர் நலப் பேரியக்கம் தலைவர்  சோழன் இயக்குநர் மு.களஞ்சியம் அவர்களும், “எழுகதிர்” திங்களிதழ் ஆசிரியரும் 1960 களில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் தலைமையிலான  நாம் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளரும் " தமிழ்க் கொடி" இதழாசிரியருமான முனைவர் ஐயா.அருகோ அவர்களும் கருத்துரையாற்றினர்.

மாலை அமர்வில், நாம் தமிழர் கட்சி ஆன்றோர் அவையம் புலவர் மறத்த மிழ்வேந்தன் அவர்களும், முல்லை நிலத் தமிழர் விடுதலை கட்சித் தலைவர் கரும்புலி கண்ணன் அவர்களும், மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டி அவர்களும், ஆதித்தமிழர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் அ.வினோத் அவர்களும், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களும் கருத்துரையாற்றினர்.

நிறைவுரையாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.