துளி செய்தி

பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைக் கொடுக்க வேண்டும்! நாம் தமிழர் போராட்டம் விருதுநகர் தொகுதி

விருதுநகரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி, கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் பாலியல் வன்முறைகளும், அத்துமீறல்களும் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தானப் பெருங்கவலையைத் தருகின்றன. அத்தங்கைக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன். மனிதத்தன்மையே துளியுமற்று, இதுபோன்ற ஈவிரக்கமற்ற கோரச்செயல்களில் ஈடுபடுவர்கள் எவராயினும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும். 

விருதுநகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பாலியல் கொடுரச் செயலில் ஈடுபட்ட கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்