நாம் தமிழர் சுஜின் மீது காவல் துறை தாக்குதல்
குமரி மாவட்ட மலைகளை உடைத்து தொடர்ச்சியாக கேரளாவிற்கு கடத்தி செல்லும் சரக்கு வாகனம் இரவிப்புதூர்கடை பகுதியில் (24-03-20220) இரவு சாலையில் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதனால் கோபமடைந்த ஊர் பொதுமக்கள் அதன் பின்னர் வந்த சரக்கு வாகனங்களை சிறைபிடித்து வாகன ஓட்டிகளோடு வாக்குவாதம் செய்துள்ளனர்.
இந்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை நிர்வாகி சகோதரர் சுஜின் அவர்களை காவல்துறை அதிகாரி காரணமின்றி வேண்டுமென்றே திட்டமிட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.
சகோதரர் சுஜின் அவர்களை தாக்கிய காவல்துறை அதிகாரி கூறுகிறார் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிவரும் நாம் தமிழர் கட்சியினர் ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவோம் என்று காவல்துறை மிரட்டியதாக திரு.சுஜின் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த காவல் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளனர்