துளி செய்தி

குறிஞ்சாங்குளம் மாவீரர் க்கு வீர வணக்கம் நிகழ்வு

குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி, உயிர்நீத்த ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு திங்கட்கிழமை காலை கட்சித் தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது


இதில் சீமான் மாவீரர் வீர வணக்கம் செலுத்தினர் அதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் சில கேள்வி முன்வைத்தார்


 இதில் சில தமிழ்குடி சார்ந்த தலைவர் திராவிடம் 2,3 சீட்டுக்கு அடிமையாகி உரிமை இழந்து விடுகின்றனர் பிஜேபி மற்றும் rss போன்ற இந்துத்துவா கட்சிகளும் குரல் எழுப்பமாட்டார்கள் ஆனால் எங்கள் கோயில் இடிப்பார்கள் ஒன்றும் பேச மாட்டார்கள் 
இனம் பகை வராமல் இரு தரப்பு மக்களையும் கருத்து வேறுபாடுகள் கேட்டு தீர்வு காணவேண்டும் என வலியூர்த்தினர்
இறந்த மாவீரர் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் அவர்களுக்கு மாவீரர் தூண் அமைக்க வேண்டும் மற்றும் குறிஞ்சாங்குளம் கோயில் கட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
இல்லை என்றால் தொடர்ந்து நாங்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பாக போராட்டம் நடைபெறும் என்று சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்
இதில் நாம் தமிழர் கட்சி சார்ந்த உறவுகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கலந்துகொண்டனர்

செய்தியாளர் சந்திப்பில் முழு காணொளி